லதா ரஜினிகாந்த் பாடிய பாடலை புரமோட் செய்த தனுஷ், லாரன்ஸ்..

நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பள்ளி தாளாளர், பாடகி, எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார். அடிக்கடி குழந்தைகள் நலன் குறித்துப் பேசும் லதா தற்போது . அன்பு ஒன்று தான் உலகில் சிறந்தது என்ற பாடல் எழுதி அதனை அவரே பாடி வெளியிட்டிருக்கிறார். குழந்தைகளிடம் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் லதா ரஜினின் இனிமையான தருணங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.அன்பின் முன்பு எல்லாமே மறந்து போகும் என்றும் மதுவுக்கு அடிமையாகக் கிடக்கும் மனிதர்கள் மனதை அழிப்பான் தன்னை மறப்பான் என்று பல அர்த்தமுள்ள பல வரிகள் அப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

பீஸ் பார் சில்ட்ரன்ஸ் (Peace for Children) என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மேம்பாடுகளுக்கான பணிகளாற்றி வரும் லதா பாடி இருக்கும் இப்பாடலை நடிகர் தனுஷ் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதே போல் ராகவா லாரன்ஸ் இப்பாடலைப் பதிவிட்டு வாழ்த்துக்கள் பகிர்ந்திருக்கிறார். தனுஷ் கூறும்போது, குழந்தைகளையே தனது உலகமாக மாற்றிக்கொண்ட தாய் உள்ளத்திலிருந்து ஒரு பாடல் .. அற்புதம் !!! அன்புதானே எல்லாமே எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாடலின் வீடியோ பார்க்க....https://youtu.be/qV3WnaGY8ks

More News >>