மயிலும், நாரையும் கலந்த அதிசய பறவை! - சென்னையில் பரபரப்பு
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மயிலும், நாரையும் கலந்தாற் போல இருந்த பறவை ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த பல்லாவரம் பாரதி நகரில் வசிப்பவர் ராபர்ட். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை தனது வீட்டின் சுவற்றின் அருகே காக்கைகள் கூட்டமாக சேர்ந்து ஒரு பறவையை கொத்தி கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
உடனே கொத்திய காகங்களை விரட்டிவிட்டு அந்த பறவையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அது வித்யாசமாக இருந்துள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிரத்தில் தலையும், கழுத்துபகுதி நாரையைப் போன்றும், உடல் மயில் போலும் இருந்துள்ளது.
இது வெளிநாட்டை சேர்ந்த அறிய வகை பறவையாக இருக்கலாம் என நினைத்த ராபர்ட் ஒரு கூண்டில் அடைத்து வைத்துவிட்டு, இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், அவர்கள் வந்து அந்த பறவையை மீட்டுச்சென்றனர்.
புதுவித பறவையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் கலந்தபடி பார்த்துச் சென்றனர்.