ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனால் பரபரப்பு

மத்தியப் பிரதேசத்தில் 110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவனை 35 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் திவாஸ் நகர் உமரியா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 வயது சிறுவன் உள்ளான். சிறுவனின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் மதியம் வயல்வெளியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இவர்களது மகன் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில், சிறுவன் திடீரென அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். உடனடியாக, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்புக் குழுவினருடன் விரைந்த போலீசார், முதல் கட்டமாக ஆய்வு செய்தனர். அதில், அந்த ஆழ்துளை கிணறு 110 அடி ஆழம் என்றும், சிறுவன் 40 அடி ஆழத்தில் சிக்கி உள்ளான் என்றும் தெரியவந்தது.

இதனால், சிறுவனுக்கு சுவாசிக்க பிராண வாயுவை செலுத்தினர். இதன்பின்னர், ஆழ்துளை கிணறு பக்கத்திலேயே மற்றுமொறு பள்ளத்தை தோண்டி சுமார் 35 மணி நேரம் போராட்டத்தறிகு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும், மீட்கப்பட்ட சிறுவனை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

More News >>