நயன்தாரா காதல் திருமணம்: திடீர் திருப்பங்களில் அடுத்தடுத்து பரிகாரம்.. ஜோதிடர் வாக்கு, நெக்ஸ்ட் டெம்ப்பிள் விசிட்...

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம் அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.நயன்தாரா திருமணத்தில் என்ன இவ்வளவு அக்கறை என்று ஒரு சிலர் கேட்பதில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை அவரது வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகள், சந்தித்த பிரச்சனைகள் எல்லாமே பேசும் பொருளாக இருந்தது. அவர் கடைசியில் வந்து நிற்கும் தளமும் ஒரு காதல் தளமாக இருப்பதால் அது எப்போது திருமண மேடை ஏறும் என்று எல்லோர் மனதிலும் கேள்வியை எழவைக்கிறது.

சிம்புடன் காதல் முறிவு ஏற்பட்ட பிறகு வில்லு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் நயன்தாரா. அதன் இயக்குனர் பிரபுதேவா. இப்படத்தில் நயன்தாரா நடித்தபோது பிரபுதேவாவுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி கல்யாண பேச்சு வரை சென்றது ஒரு கட்டத்தில் பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். பிரபுதேவா பெயரையும் பச்சை குத்திக் கொண்டார், ஆனால் அந்த காதல் ஒரு கட்டத்தில் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு நயன்தாரா மனம் நொந்துப் போயிருந்தார்.

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்தார். அதன் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் ஏற்கெனவே சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கி இருந்தார். சிம்பு மீதிருந்த கோபத்தை நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவன் மீது அன்பாக வெளிப்படுத்தினார் நயன்தாரா. அப்போது இவர்கள் இருவருக்கும் மலர்ந்த நட்பு காதலாக மாறியது. அது இன்று வரை தொடர்கிறது.பொதுவாக நடிகைகள் தங்களது காதல் பற்றி வெளியே தெரிந்தால் அது தனது பட வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று அந்த விஷயம் பற்றி மூச்சுவிட மாட்டார்கள். நயன்தாரா விஷயத்தில் அதுவேறு மாதிரியாக இருந்தது திருமணத்துக்குத் தயாராவதற்கு நயன்தாரா எண்ணிய போதெல்லாம் அவருக்குத் தமிழிலும், தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. எல்லாமே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு. இத்தனை கோடி சம்பளம் என்றால் அதையும் கொடுக்க தயாராக இருந்த பெரிய நிறுவனங்கள். அடுத்த படம், அடுத்த படம் என்று வருடங்கள் உருண்டோடியது கஜானா நிரம்பிக் கொண்டிருந்தது ஆனால் மனங்களும், மணமும் நிறைவடையவில்லை.

இந்நிலையில் தான் விக்னேஷ்சிவன் குடும்பத்தில் திருமணத்துக்கு வற்புறுத்தல் தொடங்கியது. குடும்பத்தினர் தந்த நெருக்கடியை நயன்தாரா அறிந்து அவர்களைச் சமாதானம் செய்தார். சில கோயில்களுக்குச் சென்று வந்தால் திருமணம் சீக்கிரம் நடக்கும் என்று ஜோதிடர்கள் சொல்ல அதன்படி விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே சில கோவில்களுக்கு ஜோடியாகச் சென்று வந்தனர். அதன்பலனாக நயன்தாராவுக்கு மேலும் பட வாய்ப்புகளும் சம்பளமும் கூடியதே தவிரக் கல்யாண நேரம் கூடவில்லை. நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த பட்டிலில் வலிமை படமும் இடம் பிடித்திருக்க வேண்டும் ஆனால் அந்த பட வாய்ப்பை நயன்தாரா ஏற்கவில்லை. தற்போது கைவசம் உள்ள இந்த படங்கள் முடியவதற்குள் அடுத்த 2021ம் ஆண்டும் முடிந்துவிடும் அப்படியென்றால் திருமணம் எப்போது என்று மறுபடியும் ஒரு கேள்வியுடன் ஜோதிடரை குடும்பத்தினர் அணுகிக் கேட்ட போது ஒருமுறை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக திருநாகேஸ்வரம் சென்று வந்தால் கெட்டி மேளச் சத்தம் நிச்சயம் என்று கூறி உள்ளனர். கொரோனா ஊரடங்கில் கோயில் தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு முடிந்தபின் அவர்கள் தரிசனம் செய்யக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்பிறகு திருமண அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. ஜோதிடர்கள் பெயர்களில் இப்படி விஷயங்கள் பரவிக்கொண்டிருக்க இரண்டு வருடத்துக்கு முன் விக்னேஷ், நயனின் நெருங்கிய நண்பரான இசை அமைப்பாளர் அனிருத்திடம் விக்னேஷ் நயன் திருமணம் எப்போது என்று கேட்டபோது அதற்குப் பதில் அளித்த அனிரூத், இன்னும் ஆகலையா என்றாரே பார்க்கலாம்.. அவர் சொன்ன பதிலில், ஏற்கனவே ஆயிடுச்சே உங்களுக்குத் தெரியாதா? என்ற தோணி இருந்தது. அது அனிரூத் வைத்த பஞ்ச். திருமணம் முடிந்துவிட்டதா? இனிமேல் தான் திருமணமா? என்பதைக் காதல் ஜோடிகளின் மனமும் வாயும் திறந்தால் தான் தெரியவரும்.

More News >>