பிக்பாஸ் நடிகை தொழிலதிபருடன் ரகசிய திருமணம்? ஹீரோயின் தரும் விளக்கம் என்ன..
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று ஆளும் அரசை எதிர்த்து கோஷமிட்டு பிரபலம் ஆனவர் ஜூலி என்கிற மரியா ஜூலியானா. பின்னர் இவர் கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனில் பங்கேற்றார். அதில் நடிகை ஓவியாவைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக ரசிகர்களிடம் அவப்பெயர் சம்பாதித்தார். ஆனால் ஓவியாவுக்கு மவுசு கூடியது.ஓவியா ஆர்மி என்ற ரசிகர் கூட்டமே உருவானது.ஜூலி பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார். இதற்கிடையில் ஓரிரு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வாழ்க்கை படத்திலும், அம்மன் தாயி படத்திலும் மற்றும் பொல்லாத உலகின் பயங்கர கேம் படத்திலும் நடித்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பலரையும் கவர்ந்திருந்த ஜூலி, ஓவியாவுடன் மோதிய சம்பவத்தால் ரசிகர்களிடம் வெறுப்புணர்வைச் சம்பாதித்துக் கொண்டார். அவரை வசை பாடி வலைத் தளங்களில் அடிக்கடி மெசேஜ் பகிர்கின்றனர். இந்நிலையில் ஜூலிக்கு தொழில் அதிபருடன் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக நெட்டில் தகவல் பரவியது அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர் ஜூலி தனது இணைய தள பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இணைய தள பக்கத்தில் அவர்,என் பெயரைக் கெடுக்கும் படியான பொய் செய்திகளைப் பரப்புவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மற்றவர்களை அவதூறாகப் பேசும் இது போன்ற பக்கங்களுக்கு ஆதரவு தராதீர்கள். இது சைபர் கிரைம் குற்றம். அவர்களிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளேன். எனது திருமணம் பற்றி மீடியாக்களில் உலவும் எல்லா செய்திகளுமே தவறானது என குறிப்பிட்டிருக்கிறார் ஜூலி.