பிரபல நடிகை வீட்டில் துப்பாக்கி சூடு.. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு..
மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கிய, தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கங்கனா ரனாவத். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.கங்கனா அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் கூறி வம்பில் சிக்கிக் கொள்வதுண்டு. சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி கருத்துச் சொன்னார். வாரிசு நடிகர்கள் புறக்கணிப்பால் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் எனக் குறிப்பிட்டார். இது சர்ச்சையானது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த மும்பை போலீஸ் அழைத்திருக்கிறது. ஆனால் கங்கனா விசாரணைக்கு வர மறுத்திருக்கிறார். மேலும் தயாரிப்பாளர் கரண் ஜோஹரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது கங்கனா மனாலியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் கங்கனா அதிர்ச்சி தகவல் கூறியிருக்கிறார். சென்ற வெள்ளிக்கிழமை எனது வீட்டருகே மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டனர். இரண்டு முறை துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. என்னை மிரட்டச் சிலர் இப்படிச் செய்திருக்கின்றனர். இரவு 11.30 மணி அளவில் நான் என் அறையிலிருந்தேன். அப்போது இரண்டு முறை துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. சுமார் 8 நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து சத்தம் கேட்டது. அரசியல் குறித்து நான் கருத்து தெரிவித்திருந்தேன் அதற்கு எதிராகத் தான் இந்த செயலை செய்திருக்கிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகள் யாராவது கூலிப்படையிடம் 7 அல்லது 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து இப்படிச் செய்து என்னை மிரட்டியிருக்கலாம் என்று கருதுகிறேன். மும்பையிலிருந்தால் இதுபோன்று அனுபவிப்பாய் என்றனர். இப்படித் தான் சுஷாந்த்தும் மிரட்டப்பட்டிருக்கலாம். அதனால் நான் மனாலி வந்தேன் அங்கும் மிரட்டல் தொடர்கிறது.
இவ்வாறு கங்கனா தெரிவித்தார்.இது குறித்து கங்கனா போலீசில் புகார் அளித்தார். போலீசார் கங்கனா வீட்டைச் சுற்றிலும் சோதனை நடத்தினர். தற்போது அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.மேலும் கங்கனா வெளியிட்டிருந்த மெசேஜில், எல்லோருக்கும் தெரிந்திருந்த ஒருவரும் கரன் ஜோஹாரின் நெருங்கிய நண்பர் உலகின் சிறந்த முதல்வரின் மகன், அன்பாக பேபி பென்குயின் என்று கூறுவார்கள். நான் என் வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்தால் அது நான் செய்துகொண்ட தற்கொலை அல்லஎன குறிப்பிட்டிருக்கிறார்.