போலீஸ் மீது விஷால் நடிகை பாய்ச்சல்.. நடிகர் தற்கொலை வழக்கை நம்பமுடியாது..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பற்றி மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரணையை நம்ப முடியாது எனக் கூறியிருக்கிறார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் தீராத விளையாடு பிள்ளை படத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டில் இந்தி நடிகர் நானா படேகர் மீது மீ டு புகார் கூறியதுடன் போலீசில் அவர் மீது புகார் அளித்தார். ஆனால் போதிய சாட்சி இல்லை என்று சொல்லி வழக்கை மும்பை போலீஸ் கை கழுவியது.
இந்நிலையில் நடிகையும் மாடலுமான தனுஸ்ரீ தத்தா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் வழக்கில் மும்பை போலீசாரை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.“மும்பை காவல்துறை நியாயமான மற்றும் எந்த சார்பும் இல்லாமல் விசாரிப்பார்கள் என்பதை நம்ப முடியாது. அவர்கள் வழக்கமாக இதுபோன்ற வழக்குகளையும் ஒதுக்கித் தள்ளுவதில் குறியாக இருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் அண்டர் வேல்டு தாதாக்கள் சம்பந்தப்பட்டிருந்தால் இண்டர்போல் விசாரனை நடத்த வேண்டும். நான், நடிகர் நானா படேகர் மீது மீடு புகார் அளித்தேன். என் விஷயத்திலும், போலீஸார் பல மாதங்களாகக் கவனித்து விசாரிப்பதாக நடித்துள்ளனர்.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்காக அதிக நேரத்தையும், சக்தியையும் நான் வீணடித்தேன், ஏராளமான சான்றுகள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்கள், வீடியோ காட்சிகள், சூழ்நிலை சான்றுகள், இரண்டாம் நிலை சான்றுகள் போன்றவற்றைச் சமர்ப்பித்தேன். ஆயினும் கூட, அவர்களின் இறுதி அறிக்கையில், அந்த ஆதாரங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர், நானாவின் வழக்கறிஞர்கள், ஆதரவாளர்களால் முக்கிய சாட்சிகளைப் மிரட்டிப் பேசவிடாமல் செய்தனர். என்னையும் குடும்பத்தையும் மிரட்டினார்கள். நான் இங்கிருந்து சென்றதால் காப்பாற்றப்பட்டேன். நான் இங்கே சுற்றிச் சிக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது. சுஷாந்த் இங்கிருந்து விலகி வேறு இடத்துக்குப் போகாமல் போனது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார்.