டிக் டாக்கை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் முயற்சி.. டிரம்ப் சந்திப்புக்கு பின் தகவல்..

சீனாவைச் சேர்ந்த டிக்டாக் ஆப்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு மைக்ரோ சாப்ட் முயற்சித்து வருகிறது.இந்தியா-சீனா எல்லையில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சீனா நாட்டு நிறுவனங்களின் 55 மொபைல் ஆப்ஸ்களுக்கு(செயலி) தடை விதிக்கப்பட்டது. அதில் உலகம் முழுவதும் பிரபலமான டிக்டாக் செயலிலும் ஒன்றாகும்.இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப் பரிசீலிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, டிக்டாக் செயலியைத் தடை செய்யவுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கிடையே, டிக் டாக் செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் மட்டும் அந்த நிறுவனத்தைப் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பதற்குத் திட்டமிட்டது. எனினும், டிக் டாக் செயலிக்குத் தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்து விட்டதால், பைட் டான்ஸ் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் எந்த உடன்பாடும் செய்யத் தயங்கி வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா நேற்று சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

More News >>