நடிகர் தற்கொலை வழக்கில் நடிகை தலைமறைவு.. வெளிமாநில போலீஸ் வலைவீசி தேடுகிறது..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் தந்தை கே கே சிங், பாட்னா போலீசில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரவர்த்தி மீது சரமாரியான சம்பவங்களைக் குறிப்பிட்டு புகார் அளித்தார். சுஷாந்த் தற்கொலைக்கு ரியாவும் அவரது ஆட்களும் கொடுத்த டார்சர் தான் காரணம் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்த பாட்னா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரியாவை பாட்னா அழைத்து வந்து விசாரணை நடத்த அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர் அதை ஏற்கவில்லை. பாட்னாவிலிருக்கு வழக்கை மும்பைக்கு மாற்றும் படி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே ரியா சக்ரபோர்த்தியை விசாரிக்க பாட்னா போலீஸ் மும்பை வந்துள்ளது. ஆனால் அவர்கள் அனைவரையும் கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதற்கிடையில் ரியா தலைமறைவாகி இருப்பதாகத் தகவல் வெளியாக இருக்கிறது .
பீகார் காவல்துறை டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே இதுகுறித்து கூறியதாவது: சுஷாந்த் தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரியா சக்ரவர்த்தியை இன்னும் "கண்டுபிடிக்க" முடியவில்லை. ரியா எந்த தவறும் செய்யவில்லை என்றால், அவர் தலைமறைவாகி விளையாடுவதை நிறுத்திவிட்டு விஷயங்களைத் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.ரியா ஏன் ஓடி ஒளிகிறார்? அவர் குற்றவாளி இல்லையென்றால், விசாரணையில் காவல் துறைக்கு உதவு வேண்டும். நாங்கள் ஒரு அப்பாவியைத் தண்டிப்பதை ஆதரிப்பவர்கள் அல்ல. தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதில் ரியா வெற்றி பெற்றால், நாங்கள் அவரை தொடக்கூட மாட்டோம். ஆனால் அவர் இப்படி ஓடிக் கொண்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவரை ஒரு நாள் அடைந்து உண்மையை வெளிக்கொண்டு வருவோம் இவ்வாறு என்று டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே கூறினார். ரியாவை பீகார் மாநில போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.