தந்தை, மனைவி, மகள் குணம் அடைந்தும் கொரோனாவிலிருந்து மீளாத பிரபல நடிகர்..
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையின் நானாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று குணம் அடைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து அமிதாப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். பச்சனின் குடும்பத்தில் அமிதாப், அவரது மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 4 பேருமே ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் அமிதாப், ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆனால் அபிஷேக் பச்சன் மட்டும் இன்னும் கொரோனா வார்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் தனது தந்தை குணம் அடைந்து வீடு திரும்பியதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருகிறார். "எனது தந்தை, கோவிட் -19 சோதனையில் பாசிடிவ் இருந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று அவருக்கு கொரோனா தொற்று குணம் அடைந்ததையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது வீட்டிலும் ஓய்விலும் இருப்பார். உங்கள் எல்லோரின் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி" என்று அபிஷேக் ட்வீட் செய்துள்ளார்.