நான் அப்பவே அரசியலுக்கு வந்து விட்டேன் - சகாயம் ஐ.ஏ.எஸ். அதிரடி

ஊழலை எதிர்க்கும்போதே அரசியலுக்கு வந்து விட்டேன். என் தேர்தல் அரசியலை சமூகம் தான் முடிவு செய்யும் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.

2,683 மாணவர்கள் இணைந்து ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் 5,366 நாட்டு கத்திரி விதைகளை விதைத்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வினை, ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை நிகழ்த்தியது.

இந்த உலக சாதனையை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக ரஷ்யா கலாச்சார மையத்தில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், “நான் என்னுடைய நிலத்தின் மண்ணை ஒரு பேப்பரில் மடித்து வைத்துள்ளேன். எப்பொழுதும் சொந்த ஊரையும், மண்ணையும் மறப்பதில்லை. இதுவரை 26 முறை பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளேன். அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.

எப்போது ஊழலை எதிர்க்க ஆரம்பித்தேனோ அப்போதில் இருந்து அரசியலுக்கு வந்து விட்டேன். அதுவும் ஒரு அரசியல் தான். தேர்தல் அரசியல் என்பது வேறு அதை சமூகம் தான் முடிவு செய்யும். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து பேசிவருகிறேன்.

எனவே சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படும் சூழலில் சமூகம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் என்னுடைய முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஊழல் என்பது தேச வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. அதனால் அது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>