ராஜமவுலியை தொடர்ந்து மற்றொரு இயக்குனருக்கு கொரோனா உறுதி,

கொரோனா தொற்று குறைந்து விட்டதாக ஒரு பக்கம் கூறப்பட்டாலும் அது குறைந்தது போல் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. வீட்டுக்குள்ளேயே இருங்கள், அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமையானால் முழு ஊரடங்கு என்று எல்லோரும் வீட்டுக்குள்ளேயே அடைக்கப்படுகிறார்கள். வெளியில் வந்தால் கொரோனா பரவும் என்பதால் இந்த விதிமுறைகள். ஆனால் இப்போது வீட்டுக்குள்ளேயே கொரோனா நுழைய ஆரம்பித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வீட்டைவிட்டு வெளியில் நகராமல் ஆளாளுக்கு ஒரு அறையில் இருந்துகொண்டு ஹைஜீனீக் எனப்படும் சுத்தமான தண்ணீர், சுத்தமான சாப்பாடு, சத்தான உணவு என்று உட்கொண்ட அமிதாப்பச்சன் குடும்பத்துக்குள் கொரோனா தொற்று புகுந்தது. அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யாராய், குழந்தை ஆராத்யா என 4 பேருக்கு ஒரே குடும்பத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அமிதாப், ஐஸ்வர்யாராய், ஆராத்யா குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் அபிஷேக் பச்சன் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்.

நம்மூர் நடிகர் விஷால் அவரது தந்தை ஜி.கே ரெட்டி இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு 4 நாட்களில் குணம் அடைந்ததாக விஷாலே தெரிவித்தார். அதுபோல் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் கொரொனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார், சில தினங்களுக்கு முன் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளாகிறார். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு பிரபல இயக்குனர் தேஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆன தேஜா தெலுங்கில் நேனு ராஜு நேனு மந்திரி, நுவ்வு நேனு, ஜெயம் பொன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். இவர் தெலுங்கில் இயக்கிய சில படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தற்போது தேஜா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்

More News >>