பிரபல நடிகரை மறைமுகமாக தாக்கிய நடிகை..
நடிகை கஸ்தூரி படத்தில் பிஸியாக இருக்கிறாரோ இல்லையோ சமூகவலைத்தளத்தில் சர்ச்சைகளில் சிக்கி பிஸியாக உள்ளார். சமீபத்தில் நடிகை வனிதாவிடம் அவரது திருமண விவகாரம் தொடர்பாக மோதலில் ஈடுபட்டார். முன்னதாக அஜீத் ரசிகர்களுடன் மோதி வந்தார் கஸ்தூரி, இந்த விவகாரம் கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் அஜீத் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கஸ்தூரி நடித்த பழைய பாடல் ஒன்றை வீடியோவாக வெளியிட்டு. இது நம்ம கஸ்தூரி கிழவி தானே. அந்த காலத்தில் அழகாக இருந்துள்ளார் எனக் கிண்டல் செய்திருக்கிறார். அதைக்கண்டு கடுப்பான கஸ்தூரி அந்த வீடியோவை வெளியிட்டு பதில் அளித்திருக்கிறார்.
அதில், எதற்குத் தேவையில்லாமல் ஆணியை பிடுங்குவானேன்? அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்குத் தேவையா? அஜித் கேட்டாரா அவர் பெயரைச் சொல்லி அசிங்கமா பேசுங்கன்னு. கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள் உங்களை மாதிரியான மோசமான ரசிகர்களால் அஜீத்தின் அனைத்து நல்ல ரசிகர்களுக்கும் கெட்ட பெயர். அதைப் புரிகிற அளவுக்காவது அறிவு இருக்கிறதா இல்லையா. அஜீத்குமார் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவருக்குப் பெருமை சேருங்கள். இதுபோல் மோசமாகச் செயல்பட வேண்டாம் எனக் கோபமாகப் பதில் அளித்து அட்வைஸும் செய்திருக்கிறார்.