மறுபடியும் சூடு பிடிக்கும் நடிகைகளின் குழாயடி. சண்டை.. மன்னிப்பு கேட்டேனா? ஜெர்க் அடித்த இயக்குனர், வம்பிழுத்த நடிகை..
நடிகைகளின் குழாயடி சண்டை என்றதுமே சமீபகாலத்தில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோரின் சண்டை தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று நெட்டிஸன்கள் மீம்ஸ் கிர்யேட் செய்து போடுகின்றனர்.வனிதா பீட்டர் பால் திருமண விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கேட்டனர் லட்சுமி ராமகிருஷ்ணன்., கஸ்தூரி இவர்களுடன் சூரியாதேவி என்ற பெண்ணும், டைரக்டர், டிவி நடிகர் நாஞ்சில் விஜயனும் சேர்ந்துகொண்டனர். அவர்களுடன் மோதலில் ஈடுபட்ட வனிதா 4 பேர் மீதும் போலீஸில் புகார் அளித்தார். சூரியா தேவியை போலீஸ் கைது செய்தது பின்னர் அவர் ஜாமினில் வெளியில் வந்தார்.
இந்நிலையில் நாஞ்சில் விஜயன் தன்னிடம் தொலைப்பேசியில் பேசி மன்னிப்பு கேட்டதாகவும் அதை ஏற்றுக் கொண்டதாகவும் வனிதா தெரிவித்தார். சூர்யாதேவி விவகாரத்தில் ரசிகர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்த மாட்டேன் என்றும் கூறி இருந்தார்.. விஷயம் இத்துடன் முடிந்துவிடும் என்று எண்ணினால் மீண்டும் புதிய வேகத்துடன் விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.நாஞ்சில் விஜயன் இந்த விவகாரத்தில் ஒரு டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டுள்ளார். அதில். ஒரு சில பிரச்சனையைப் பேசி புரிய வைப்பதற்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்தால் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்று கூறியிருக்கிறார்.
நாஞ்சில் விஜயனின் இந்த டிவிட்டை தனது டிவிட்டரில் ரீடிவிட் செய்திருக்கும் கஸ்தூரி. எனது அனுபவத்தில், வனிதா மேடம் சொன்னதுல பொய்தான் அதிகம். அவருக்குப் பொய்ச் சொல்லும் வியாதி என்று வனிதாவை நேரடியாக வம்புக்கிழுத்திருக்கிறார்.வம்புக்கு வந்தவர்களை வெச்சி செய்துக் கொண்டிருந்த வனிதா திடீர் சைலண்ட் ஆகியிருக்கிறார். யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் தனது இணைய தள பக்கத்தில் புறக்கணிப்பு பாணியைக் கையில் எடுத்திருக்கிறார். யாரோ ஒரு பெண் சந்தோஷமாகப் பாடுவதுபோல் வீடியோ வெளியிட்டு அதில், நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். பிஸியாக உள்ளேன். யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. நானாக உங்களிடம் வராவிட்டால் என்னை ஒருபோதும் நீங்கள் பெற மாட்டீர்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.அதேபோல், என்னுடைய எதிர்ப்பாளர்கள் தான் எனது ஊக்குவிப்பாளர்கள் என ரசிகர் ஒருவரின் டிவிட்டை ரீடிவிட் செய்திருக்கிறார் வனிதா.