தளபதி நடிக்கும் மாஸ்டர் இம்மாதம் ஒடிடியில் ரிலீஸ்? பட்டியல் வெளியானதால் ரசிகர் மத்தியில் பரபரப்பு..
தளபதி விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருகின்றன. சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அடிக்கடி தகவல் வெளியாகிறது. அதனை பட தயாரிப்பு நிறுவனம் மறுத்து வருவதுடன் தியேட்டரில் தான் மாஸ்டர் வெளியாகும் என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் அமேசான் ஒடிடி பட பட்டியலில் மாஸ்டர் படம் ஆகஸ்ட்டில் வெளியாகவிருப்பதாக தகவல் இடம் பெற்றிருக்கிறது. அந்த பட்டியல் இணைய தளத்தில் வைரலானது.அது குறித்து பட தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது. படத்தை வெளியிட உள்ள செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம், அமேசான் பிரைம் லிஸ்ட்டில் வெளியாகி இருப்பது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் அல்ல. அது 2016ம் ஆண்டு வெளியான கொரியன் படமான மாஸ்டர். விஜய் நடித்துள்ள படம் தியேட்டரில் தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது பற்றி பிஆர் ஒ ரியாஸ் தெரிவித்துள்ள மெசேஜில்,விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் ஒடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று வதந்தி பரவி வருகிறது. அது உண்மையல்ல தியேட்டரில் தான் மாஸ்டர் வெளியாகும். இதில் மாற்றம் கிடையாது என தெரிவித்துள்ளார்.