பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா.. வீடியோவில் உறுதி செய்தார்..

கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்த பாடில்லை நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா. டைரக்டர் ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சென்ற சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டார். அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. திடீரென்று இது வதந்தி என்று அவரது பிஆர் ஓ தெரிவித்தார். ஆனால் அவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்.

இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில்,எனக்குச் சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்தது. அதை எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பாததால் மருத்துவமனை வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் லேசான கொரோனா தொற்று தென்பட்டது. நீங்கள் வீடு சென்று ஓய்வெடுக்கலாம் என்றனர். ஆனால் அதை விரும்பாமல் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன். எனக்கு ஜூரம் குறைந்திருக்கிறது. மற்றபடி நான் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறேன். ஓய்வுக்காகத்தான் மருத்துவமனை வந்திருக்கிறேன் ஆனால் நிறைய போன்கால்கள் வருகின்றன. என்னால் அதை அட்டெண்ட் செய்ய முடியவில்லை. எனவே போன் செய்து விசாரிக்க வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம் உங்கள் விசாரிப்புக்கு நன்றி. ஒரு சில நாட்களில் வீடு திரும்பிவிடுவேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>