கொரோனாவில் வில்லன் நடிகருக்கு தடபுடல் கல்யாணம்.. ஸ்பெஷல் திருமண அரங்கு செட் தயாராகிறது..
கொரோனா ஊரடங்கு என்பதால் கோடீஸ்வர நடிகர்கள் தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடியாமல் நொந்துபோய் இருக்கின்றனர். டோலிவுட் நடிகர் நிதின் தனது திருமணத்தைத் துபாய் நட்சத்திர ஓட்டலில் நடத்தி ஒரு கலக்கு கலக்க எண்ணியிருந்தார். ஷாலினி என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. துபாய் திருமணத்துக்காக ஏற்பாடு செய்துவந்த போது திடீரென்று கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஓரிரு மாதத்தில் லாக்டவுன் முடிந்துவிடும் திருமணத்தைத் திட்டமிட்டபடி நடத்தலாம் என எண்ணிக் காத்திருந்தார். ஆனால் லாக்டவுன் முடிவதுபோல் தெரியவில்லை. இதனால் தடபுடல் திருமண கனவு கலைந்து போனது. நிச்சயதார்த்தம் ஆகி 4 மாதம் ஆன நிலையில் இதற்கு மேலும் காத்திருக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் வற்புறுத்தியதை அடுத்து கடந்த மாதம் எளிமையாக திருமணம் நடந்தது.
அதேபோல் தற்போது பாகுபலி வில்லன் நடிகர் ராணா தடபுடல் திருமணம் நடத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இவர் தனது கேர்ள் பிரண்ட் மிஹீகா பஜாஜ் என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். தனது திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்த எண்ணினார் ராணா. அவரது ஆசையிலும் கொரோனா ஊரடங்கு விளையாடிவிட்டது. கொரோனா தொற்று பயத்தால் எல்லா நடிகர் நடிகைகளையும் திருமணத்துக்கு அழைக்க முடியாத நிலையில் மனம் உடைந்து போனார். வரும் 8ம் தேதி ராணா, மிஹீகா திருமணம் நடக்கிறது.
இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஐதராபாத் ராமநாயுடு ஸ்டுடியோவில் திருமணம் நடக்கிறது. இதற்காக சினிமா பாணியில் ஸ்பெஷல் திருமண மண்டபம் அரங்கு அமைக்கப்படுகிறது. ராணா, மிஹீகா ஆகிய இரு வீட்டுக் குடும்பத்தார் மட்டுமே பங்கேற்றாலும் அந்த குடும்பமே நட்சத்திர குடும்பம் என்பதால் அதுவே பிரமாண்டத்தைக் கூட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. நடிகர்கள் நாகார்ஜூனா. அமலா, நடிகை சமந்தா, நாக சைதன்யா ஜோடிகளுடன் நடிகர் அகில் போன்றவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.