பிரபல காமெடி நடிகருக்கு கொரோனா தொற்று..
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அபிஷேக் தவிர மற்றவர்கள் குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். கொரோனா தொற்றால் கோலிவுட்டிலும் நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதுபற்றி வெளியில் சொல்லத் தயங்கி சைலன்ட்டாக சிகிச்சை எடுத்து வந்தனர்.
அமிதாப்பச்சன் தனக்குத் தொற்று ஏற்பட்டது பற்றி பகிரங்கமாகத் தெரிவித்த பிறகு மற்றவர்களும் தயக்கம் நீங்கி தங்களுக்குத் தொற்று ஏற்பட்டது பற்றி வெளியில் சொல்லத் தொடங்கினர். நடிகர் விஷால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து குணம் அடைந்தார். அதுபற்றி அவர் வீடியோவில் தோன்றி பேசினார். அதேபோல் ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். தற்போது பிரபல காமெடி நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
காமெடி நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர் திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் பின்னணி பாடகர் எஸ்,பி.பாலசுப்ரமணியம் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். ஏற்கனவே பாகுபலி இயக்குனர் ராஜமவுலி, இயக்குனர் தேஜா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கருணாஸ் கடைசியாக திரௌபதி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் .மேலும், பரேஷ் ராவல் ,ஜாக்கி ஷெராப், மோகன்பாபு போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருக்கிறது.