சிம்புவின் மாநாடு நிறுத்தமா? தயாரிப்பாளர் கோபம்..

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்து வந்தார் சிம்பு. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.இந்நிலையில் சிம்புவுக்கும் பட தரப்புக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அதில் நடிக்க மறுத்தார் சிம்பு. இந்த மோதல் முற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் ஆனது.. இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. சிம்பு சார்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டார். முடிவில் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பில் இருப்பார் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

பின்னர் ஒரு வழியாகப் படப்பிடிப்பு தொடங்கியது. பிரம்மாண்ட செட் அமைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் சிம்பு கலந்துகொண்டு நடித்தார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் எல்லா படப்பிடிப்புகளும் போல் மாநாடு படப்பிடிப்பும் தடைப்பட்டது.சமீபத்தில் மாநாடு படம் நிறுத்தம் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதைக்கண்டு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில், மீடியா மற்றும் அதனைச் சார்ந்து இருக்கும் குழுவை எப்போதும் மதிக்கின்றவன் நான். படம் நிறுத்தம் என்று எந்த ஒரு அறிக்கையும் நான் தரவில்லை. அப்படியிருக்கும் போது சம்பந்தப்பட்ட படக்குழுவினரை விசாரிக்காமல் எப்படி இதுபோல் செய்தியை வெளியிடலாம் ? மாநாடு படம் ஒருபோதும் நிறுத்தப்படாது. டேபிளில் அமர்ந்துக்கொண்டு எழுதுவதை நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

More News >>