ரோகிங்கியா மக்கள் வாழ்ந்த இடத்திலேயே கட்டப்படும் ராணுவத் தளம்hellip மியான்மரின் இரக்கமற்ற செயல்!
சொந்த நாட்டிலிருந்து சொந்த நாட்டு ராணுவத்தினாலேயே துரத்தப்பட்டு அகதியாக்கப்பட்டவர்கள் மியான்மரைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லீம்கள்.
தற்போது அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே ராணுவத் தளம் அமைத்து வருகிறது அந்நாட்டு அரசு என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில், மியான்மர், அந்நாட்டின் சிறுபான்மையினர்களான ரோகிங்கிய முஸ்லீம்களை ராணுவத்தை வைத்து கொன்று குவித்தது. இன சுத்திகரிப்பு என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உலகின் பல மனித உரிமை அமைப்புகள் குற்றச் சாட்டின.
இதனால், அவர்களின் பெரும்பான்மையானவர்கள் வங்க தேசத்துக்கு தஞ்சம் அடைந்தனர். ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் வங்க தேசத்துக்கு அகதிகளாக புலம் பெயர்ந்தனர். பின்னர் இந்த விஷத்தில் ஐ.நா சபை தலையிட்டதால், `ரோகிங்கியா மக்களை மீண்டும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்’ என்று வெற்று வாக்குறுதியை சமீபத்தில் கொடுத்தது மியான்மர்.
இந்நிலையில், தான் கொடுத்த வாக்குறுதிக்கு புறம்பாக, ரோகிங்கியா மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணுவத் தளங்கள் அமைத்து வருகிறது மியான்மர். இது ஐ.நா சபை உட்பட பல அமைப்புகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு: thesubeditor.com