பாபர் ஆசம்.. கிரிக்கெட் உலகை ஆள இருக்கும் `Fab Five!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. ஆட்டம் சில மணிநேரங்கள் மழையால் தடைப்பட்டாலும், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியின் போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமின் ஆட்டத்தைப் பாராட்டிப் பேசினார். இன்றைய போட்டியில் பாபர் ஆசமுக்கு பதிலாக இந்திய கேப்டன் கோலி விளையாடி இருந்தால் அனைவரும் பேசி இருப்பார்கள். பாபர் ஆசம் என்பதால் ஒருவரும் பேசவில்லை. பாபர் ஆசம், இளம் வீரர்; சிறப்பாக ஆடுகிறார். கோலி, ஸ்மித், வில்லியம்சன் மற்றும் ரூட் ஆகியோருக்கு அடுத்ததாக ஐந்தாவதாக பாபர் ஆசம் கிரிக்கெட் உலகை ஆள இருக்கிறார்" எனக் குறிப்பிட்டார்.
நாசர் ஹுசைன் இப்படிப் பேசியதற்குக் காரணம் இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணிலிருந்து வந்திருக்கும் உலகத்தர பேட்ஸ்மேன் பாபர் ஆசம். டி வில்லியர்சை ஆதர்ச நாயகனாகக் கொண்டு, தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய பாபர், இப்போது டி வில்லியர்ஸை போலவே, 'வில்லோ வீல்டிங்', ஸ்ட்ரெயிட் டிரைவ் என தனக்கு வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு போட்டிகளிலும் முத்திரை பதித்து வருகிறார். கடந்த 5 போட்டிகளில் இது அவருக்கு 5-வது அரை சதம், இதில் மூன்று முறை சதமடித்தும் அசத்தி இருக்கிறார் பாபர் ஆசம். இன்றைய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சதம் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது.
இங்கிலாந்தின் அனுபவமிக்க ஆண்டர்சன், பிராட் கூட்டணி, மிரட்டும் ஆர்ச்சர், வோக்ஸ் கூட்டணியைச் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளத் தயங்கினர். ஆனால் நேற்றைய போட்டியில் பாபர், அவர்களை எளிதாகச் சமாளித்தார். இவர்களின் பந்துகளைக் கவர் டிரைவ், ஸ்ட்ரெயிட் டிரைவ் அசத்தலாகத் திருப்பினார்.