சுஷாந்த் தற்கொலைக்கு பிறகு நடிகை தற்கொலை .. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது வழக்கு மும்பை போலீஸ் விசாரணை, பாட்னா போலீஸ் விசாரணை, சுப்ரீம் கோர்ட் விசாரணைகளைக் கடந்து சிபிஐ விசாரணைக்குச் சென்றிருக்கிறது. சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு அடுத்தடுத்து சில நடிகர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தி டிவி தொடர்களில் நடித்த மன்மீத் கிரேவல் மற்றும் நடிகர் பிரேக்ஷா மேத்த, மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தங்களது வீடுகளில் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் வேலை இழந்து பொருளாதார சிக்கலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் நேற்று இந்தி டிவி நடிகரும் ஒரு சில இந்தி படங்களில் நடித்தவருமான சமீர் சர்மா, மும்பையில் உள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சுஷாந்த் தவிர மற்ற நடிகர்கள் பொருளாதார நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டதாகவே கூறப்படுகிறது. கொரோனா லாக்டவுன் பலரது வேலையைப் பறித்து அதன் மூலம் அவர்களின் வருமானத்தைப் பறித்து தற்போது உயிரையும் பறித்திருக்கிறது.
தற்போது பொருளாதார நெருக்கடியில் நடிகை ஒருவரும் தற்கொலை செய்து கொண்டு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.பீகாரைச் சேர்ந்தவர் அனுபமா பதக். போஜ்புரி பட வாய்ப்பு, மற்றும் டிவி வாய்ப்புக்காக மும்பையில் தங்கி இருந்தார் இவர் சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில் வீடியோ வெளிவிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த வீடியோவில, ' சிலர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் யாரையும் நம்ப முடிய வில்லை' 'என்றும் தெரிவித்திருக்கிறார்.