விஜயகாந்த் -கருணாஸ் நடிகைக்கு கொரோனா.. குடும்பத்தில் 10பேருக்கு பரவிய தொற்று..
விஜயகாந்த் நடித்த ராஜாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற தமிழ் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் நவனீத் கவுர். இவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது கணவர் ரவி ராணா எம் எல் ஏ வாக இருக்கிறார். நவனீத் கவுருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை பேஸ்புக் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
முன்னதாக அவரது குடும்பத்தில் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது பரிசோதித்த போது நவனீத் கவுருக்கு தொற்று இல்லாமல் இருந்தது. மீண்டும் அவருக்குப் பரிசோதித்த போது தொற்று இருப்பது தெரிந்தது. பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் சமீபகாலத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆரத்தியா, நடிகர் விஷால். நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், டைரக்டர் ராஜமவுலி, தேஜா, காமெடி நடிகர் கருணாஸ் போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.