நடிகை குஷ்பூவுக்கு பாலியல் மிரட்டல்.. பெயர், போன் எண்ணுடன் போலீசில் புகார்..
பிரபல நடிகை குஷ்பூவுக்கு பாலியல் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருப்பதுடன் மிரட்டல் விடுத்தவர் பெயர் சஞ்சய் சர்மா. கொல்கத்தாவிலிருந்து இந்த போன் அழைப்பு வந்தது எனச் சொல்லி அந்த எண்ணையும் பகிர்ந்திருக்கிறார். அத்துடன் கொல்கத்தா போலீசில் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று புகாரும் பதிவு செய்திருக்கிறார்.
குஷ்பூ காங்கிரஸ் கட்சியின் பத்திரிக்கை தொடர்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். மேலும் குஷ்பூ டிவி சீரியலிலும் நடிக்கிறார்.குஷ்பூ அடிக்கடி அரசியல் கருத்துக்கள் கூறிவருகிறார். மோடி ஆட்சி பற்றி விமர்சிப்பதுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்புகிறார். அப்போதும் அவரைப்பற்றி ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். ஆனால் போனில் அழைத்து பாலியல் மிரட்டல் யாரும் செய்ததில்லை. இது சினிமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.