பாய்பிரண்டுடன் தனிமையில் ஹீரோயின்.. தந்தையின் கொரோனா தகவல் கேட்டு அதிர்ச்சி..
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்தவர் திஷா பதானி. தெலுங்கு படத்திலும்நடித்திருக்கிறார். இவரது தந்தை ஜெகதீஷ் சிங் பதானி. இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகத் தகவல் வெளியானது.ஜெகதீஷ் சிங் உத்தரப்பிரதேச விஜிலென்ஸ் பிரிவில் துணை சூப்பரெண்டாக இருக்கிறார். சமீபத்தில் ஊழல் வழக்கை விசாரிக்க லக்னோ சென்றார். அப்போது அங்கிருந்த பொறியாளருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதாக மண்டல அலுவலகத்தை மூடினர்.
இதையடுத்து அங்குச் சென்ற ஜெகதீஷ் சிங்கிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதைக்கேட்டு திஷா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதனை திஷா பாதனி மறுத்திருக்கிறார். தனது தந்தைக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை, அவர் உடல் நலமுடன் நன்றாக இருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் திஷா பதானி தனது பாய்பிரண்ட் டைகர் ஷெராப்புடன் தனிமைப்படுத்தலிலிருந்து வருகிறார்.