செல்பி எடுத்துக்கொள்ள இனி தனி இடம்: ரயில்வே அதிரடி ஏற்பாடு

செல்பி எடுக்கும்போது ரயில்களில் அடிப்பட்டு இறக்கும் சம்பவங்களை தடுக்க ரயில்வேத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

ஓடும் ரயில் அருகே செல்பி எடுக்க ஆசைப்பட்டு, விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளை தடுக்கும் விதமாக ரயில்வேத் துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, புனே, மும்பை, நாக்பூர், லக்னோ, வாரணாசி, ஜெய்பபூர், டெல்லி மற்றும் மைசூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு நவீன மேம்பட்ட வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி மூலம் லிப்ட், எஸ்கலேட்டர், சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் போன்ற முக்கிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. அத்துடன், செல்பி எடுக்க தனி இடம் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், செல்பி எடுக்க விரும்பும் மக்கள் விபத்து பயமின்றி எடுக்கலாம். நாட்டில் செல்பியால் ஏற்படும் விபத்துகளை தடுக்க இந்திய ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>