28 நாளாகியும் ஹீரோவுக்கு குணம் ஆகாத கொரோனா.. மருத்துவமனையில் மற்றொரு நடிகர் அனுமதி..
அமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், கருணாஸ். ஐஸ்வர்யா அர்ஜூன். போன்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் அமிதாப். ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தனர். தந்தை அமிதாப்புடன் மருத்துவமனையில் சேர்ந்த நடிகர் அபிஷேக் பச்சன் இன்னும் குணம் அடையாமல் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் இருக்கிறார். இன்றுடன் 28 நாளாக அவர் கொரோனா தனிமை வார்டில் சிகிச்சையில் இருக்கிறார். தனிமை தன் மனநிலையைப் பாதிக்காமல் இருப்பதற்காக அவர் பாடல்கள் கேட்டு வருகிறாராம். இது பற்றி அபிஷேக் டிவிட்டரில் வெளியிட்டுள்ள மெசேஜில், 28வது நாளாக மருத்துவமனையில் இருக்கிறேன். 2014ம் ஆண்டில் ஷாருக்கான் நடித்த சுவாதேஷ் படத்தில் இடம்பெற்ற யென் ஹி சாலா.. பாடலை கேட்டபடி நேரம் கழிகிறது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
மேலும் சில தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் தனது உடல்நிலை குறித்து டாக்டர்கள் தெரிவித்திருக்கும் விவரத்தை வெளியிட்டுள்ளார். அதில் 28 நாள் ஆயிடுச்சி, சீக்கிரம் வீடு திரும்புவது போல் தெரியவில்லை.. ம்ம்ம் கம்மான் பச்சன் உன்னால் முடியும் என தனக்கு தானே நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அபிஷேக்.இந்நிலையில் தமிழ் நடிகர் கருணாஸ் 2 தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாசிடிவ் இருந்ததால் தன்னை திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கருணாஸ் நிலைமை குறித்து அவரது மகன் கென் கூறும்போது, நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என் தந்தைக்கு கொரோனா பாஸிட்டிவ்வாக உள்ளது. அவர் ஒரு அரசியல்வாதி மற்றும் ஒரு சமூக சேவையாளர் என்பதால் அவர் கடந்த நாட்களில் தனது தொகுதி மற்றும் பல இடங்களுக்குச் சென்று வந்தார். இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நிலையாக உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்.