காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன் - வைரமுத்து உருக்கம்

காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப் ஸ்டேசன் உள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில், மலையேற்றத்திற்கு சென்ற கல்லூரி மாணவிகள் உட்பட 39 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தேனி காட்டு தீ குறித்து கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதில் ''உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். 'சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ' என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.

இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>