விமான விபத்தில் பலியானவர்களுக்கு கமல், ரஹ்மான் பிரபலங்கள் இரங்கல்..
துபாயிலிருந்து 190 பேர்களுடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டுக்கு நேற்று இரவு வந்த விமானம் ரன்வேயில் தரையிறங்கும் போது பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் 2 பைலட் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர். 127 பேர் காயம் அடைந்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.விமான விபத்தில் பலியானவர்களுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும் மக்கள் நீதிக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மெசேஜில். கோழிக்கோடு விமான விபத்தில் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய வாழ்த்துகிறேன். மீட்புப் பணியில் ஈடுபட்ட கோழிக்கோடு மக்களுக்கு என் வணக்கம். ஏற்கனவே மருத்துவ பணியாளர்கள் அதிக பணி பளூவில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள பலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும், தங்களின் பிரியமானவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என இந்தி நடிகர் ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.விமான விபத்தில் தங்களின் அன்பானவர்களை இழந்த தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவும் கடந்து போகும் என இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறி உள்ளார்.நடிகர் மகேஷ்பாபு கூறும்போது, கோழிக் கோடு விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு. உயிரிழந்தவர்களுக்கும் எனது அனுதாபங்கள். இது எதிர்பாராத விபத்து. காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய வேண்டுகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
கோழிக்கோடு விமான விபத்து மற்றும் ராஜா மாலா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களது குடும்பத்தார் சோகத்திலிருந்து மீளப் பிரார்த்தனைகள் எனக் கூறி உள்ளார் நடிகர் பிருத்விராஜ்.