பாம்புகள் ஊர்ந்த மருத்துவமனை மீது நடிகையின் அதிரடி நடவடிக்கை.. கண்டனம் தெரிவித்த பின் செய்து காட்டினார்..

ஐந்து மாதங்களுக்கு முன் படப்பிடிப்பிற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்குச் சென்றார் ஜோதிகா. மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமலும், சுகாதாரா வசதி இல்லாமலும், தேவையான உபகரணங்கள் இல்லாமலும், முட் புதர்கள் நிரம்பி பாம்புகள் ஊர்ந்த வண்ணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஜோதிகாவிடம் அங்கிருந்த நோயாளிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனையின் அவலத்தை கண்டு கண்டனம் தெரிவித்த ஜோதிகா. ஆலயங்களுக்குப் பதில் மருத்துவமனைகளைக் கட்டலாம் என்றார். இது சர்ச்சையாக உருவானது. அரசு மருத்துவமனை பற்றி தனது கோபத்தை வெளிப்படுத்திய ஜோதிகா தற்போது அந்த மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும் மற்றும் சுகாதாரமாகப் பராமரிப்பதற்காகவும் ரூ 25 லட்சம் ரூபாயை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிதியுதவியாக அளித்துள்ளார். அத்துடன் குழந்தைகள் காப்பகத்திற்கு உபகரணங்களும் வாங்கி அளித்திருக்கிறார். இந்த உதவி அகரம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஜோதிகாவுக்கு அமைச்சர் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.

More News >>