சொகுசு போதும் ஒரு நோயாளியின் செலவையாவது ஏற்க பாருங்கள்.. பிரபல நடிகர்களுக்கு சோனு சூட் அழைப்பு..

கொரோனா ஊரடங்கில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும். உணவின்றி, தங்குவதற்கு வழியின்றியும் தவித்தவர்களுக்கு ஓடோடி சென்று உதவினார் நடிகர் சோனு சூட். சினிமாவில் வில்லானாக நடித்தவர் நிஜ வாழ்வில் ஹிரோவானார். மேலும் மாடு வாங்கப் பணமில்லாமல் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு உடனடியாக டிராக்டர் வாங்கி தந்தார். வெளிநாட்டில் படிக்கச் சென்ற மருத்துவ மாணவர்களை இந்தியாவுக்கு விமானம் ஏற்பாடு செய்து அழைத்து வந்தார். சோனு சூட் தாராளமாக உதவி செய்ததால் அவருக்குத் தினமும் உதவி செய்யக் கேட்டு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.

கொரோனா ஆரம்பக் கட்டத்தில் பல நடிகர்கள், சில நடிகைகள் தங்களது சங்கத்தின் சார்பில் உதவிகள் செய்ய நிதி அளித்தனர். அத்துடன் வேலை முடிந்தது என்று அவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனாலும் தற்போது கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. ஊரடங்கும் முடிந்த பாடில்லை எனவே பிரபலங்களுக்கு சோனு சூட் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:தேவையானவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். உங்களது சொகுசு வாழ்க்கையிலிருந்து வெளியில் வாருங்கள். உங்களால் முடிந்தால் உங்கள் அருகில் உள்ள ஒரு மருத்துவனையிலிருந்து நோயாளிகளைத் தத்தெடுத்து உதவுங்கள். குறைந்தபட்சம் மருத்துவச் செலவையாவது ஏற்றுக்கொள்ளுங்கள். இதை எல்லோரும் செய்தால் பாதி சுமை கண்டிப்பாகக் காணாமல் போய்விடும் இது சத்தியம்.இவ்வாறு சோனு சூட் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வேக் அப் என்ற ஹேஷ் டேக் உருவாக்கி இருக்கிறார். அதை ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

More News >>