சிறையில் சசிகலாவுக்கு விஐபி பிரிவில் உள்ளாரா? - மீண்டும் பரபரப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு உயர்தர வகுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்

இந்நிலையில் கடந்த ஆண்டே, சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதற்காக ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றச்சாட்டி இருந்தார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். இதனையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகள் அடங்குவதற்குள் வேறொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை சீருடை அணியாமல் சாதாரண ஆடைகள் அணிந்திருந்துள்ளார். இதனையடுத்து, ‘சசிகலா, இளவரசி ஆகியோர் சாதாரண ஆடைகள் அணிவதற்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள்?’ என்று அங்கு உள்ள சிறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து ‘சாதாரண உடைகள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது’ என்று ரேகா சர்மா, சசிகலாவிடம் கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சசிகலா அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா இருந்த சிறை அறைக்குள் சென்று ரேகா சோதனையிட்டார். அப்போது, ஒரு பையில் பல்வேறு வகையான வண்ண, வண்ண ஆடைகள் இருந்ததாக தெரிகிறது.

ஆய்வின்போது சசிகலா சாதாரண உடையில் இருந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, முதலமைச்சர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ‘சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுக்கும்வேலையை நாங்கள் செய்ய மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>