தளபதிக்கு தலை வணங்கும் மின்னல் வேக பெண் பைக் ரேஸர்.. வாட் ஏ ஹீரோ. என்ன ஸ்டைல்..
நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங்.. பாடலுக்கு உலக அளவில் சாதனை நிகழ்த்தும் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கும் ஐ ஏ ஆர் ஏ (IARA) விருதுகள் வழங்கும் நிறுவனத்தின் அம்பாசிடராக உள்ள ஆடம் மோர்லே பாராட்டு தெரிவித்திருந்தார். அது டிரெண்டிங் ஆனது. இந்நிலையில் விஜய்யின் ஸ்டைலுக்கு பைக் ரேஸ் வீராங்கணை பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா. இவர் சமீபத்தில் தேசிய மனித உரிமை எதிர்ப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகத்தின் தமிழக மாநில பெண்கள் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் அஜீத்குமார் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அலிஷாவின் தந்தை ஆர்.ஏ.அப்துல்லாவும் அஜீத்தும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர்.தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் சாந்தனு சமீபத்தில் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கில்லி படத்தில் விஜய்யின் ஆக்ஷன் காட்சி ஸ்கிரீன் ஷாட்டை நெட்டில் பகிர்ந்தார். அதைப்பார்த்த அலிஷா அப்துல்லா விஜய்யைப் பாராட்டி இருக்கிறார். , என்ன ஒரு ஹீரோ ... தலை வணங்குகிறேன் ... அவரது ஸ்டைல் செம்ம மாஸ்" என குறிப்பிட்டிருந்தார்.
விஜய் நடித்த 'கில்லி' படத்தைத் தரணி இயக்கி இருந்தார். திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்தார். ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி போன்றவர்களும் நடித்திருந்தனர். அதர்வா நடித்த இரும்பு குதிரை படத்தில் அலிஷா அப்துல்லா ரோலில் நடித்திருந்தார், மேலும் ஊரடங்கில் நாய்களுக்கு உணவளித்து, கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளை மீட்டும் வளர்த்து வருகிறார்.