சென்னை மருத்துவமனையில் கருணாஸுக்கு கொரோனா சிகிச்சை.. மருத்துவர்களுடன் வீடியோ வெளியீடு..
ரஜினி, அஜீத், தனுஷ், ஜிவி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கருணாஸ். இவர் திருவாடானை தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார். சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி கருணாஸ் மகன் கென் வெளியிட்ட மெசெஜில், என்னுடைய அப்பாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் அரசியல்வாதி மற்றும் சமூக சேவைகள் செய்து வருகிறார். அவர் தன்னுடைய தொகுதிக்கும் மற்ற இடங்களுக்கும் கடந்த சில தினங்களில் சென்று வந்திருக்கிறார். அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாஸ் டாக்டர்களுடன் இருக்கும் புகைப்படம் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.