பள்ளி வினாத்தாளில் கீழ் சாதி குறித்த கேள்வியால் சர்ச்சை!
சி.பி.எஸ்.இ 6 ம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் கீழ் சாதி பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 6ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வுத்தாளில், ’இந்துமத வர்ணாசிரமத்தின்படி மிகக்கீழான சாதி எது?’ என்னும் கேள்வி இடம்பெற்றுள்ளது.
அதற்கு பதில்களாக ’1. பிராமணர்கள் 2.சூத்திரர்கள் 3.சத்திரியர்கள் 4.வானப்ரஸ்தர்கள்’ என்னும் நான்கு தெரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வினாத்தாளை புகைப்படம் எடுத்து பலர் இணையத்தில் பகிர்ந்து, கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களிடம் சாதிப் பிரிவை திணிக்கும் உள்நோக்கத்துடன் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது ஆர்எஸ்எஸ் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பாடதிட்டம். இதுதான் அவர்கள் நாளை முன்வைக்க உள்ள அரசியல் சட்டம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com