திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை இம்மாதம் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ஆம் தேதி ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, விசாரணைக் காவல் முடிந்து அவர் பாட்டியால நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு பேதிய ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ தரப்பு வாதிட்டது. எனவே, மேலும் 15 நாட்கள் விசாரணைக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

சிபிஐ வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு, அவரது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று புதிய மனுவைத் தாக்கல் செய்தது. அத்துடன், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டால், சிறையில் அவருககுத் தனி அறை வழங்க வேண்டும் என்றும்கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், கார்த்தி சிதம்பரம் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>