ராம் கோபால் வர்மாவுக்கு கொரோனா? கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவல்..

ரத்த சரித்திரம், ரங்கீலா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. புகழின் உச்சிக்குச் சென்றவர் சர்ச்சைகளில் சிக்கி தற்போது ஆபாசப் பட ரேஜ்சுக்கு தனது படங்களை இயக்கி ஒடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் தனது இமேஜை உயர்த்தும் வகையில் ஆணவக் கொலை சம்பந்தப்பட்ட படம் இயக்குவதாக அறிவித்து மர்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.தனது மகளை மணந்தவரைத் தந்தையே கூலிப்படையை வைத்து மகளின் கணவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இக்கதை உருவாகி வருகிறது.

இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் பெண்ணின் பெற்றோர் நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடர்பாக வர்மாவை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் வர்மாவுக்குப் பதில் அவரது வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜரானார். அவர் கூறும் போது,ராம் கோபால் வர்மாவுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென்றார். அதை ஏற்று வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.அந்த தகவல் பத்திரிகை, ஊடகங்களில் வெளியானது. அதைக்கண்டு ஷாக்கான ராம் கோபால் வர்மா, நான் நன்றாக ஃபிட்டாகத் இருக்கிறேன் என்று ஒர் படத்தையும் வெளியிட்டார். இது அவருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டதாக வக்கீல் கூறிய நிலையில் வர்மா நலமாக இருக்கிறேன் என்பதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

More News >>