அரசு உத்தரவை கண்டு சூப்பர் ஸ்டார் கோபம்.. நடிப்புக்கு முழுக்கு போட வேண்டுமா?
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதித்துள்ளதால் கடந்த 4 மாதங்களைக் கடந்து ஊரடங்கு அமலில் உள்ளது. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சினிமா துறைக்கு மட்டும் போதுமான தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாகப் பல மாநிலங்களில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ஆந்திரா, மகாராஷ்டிராவில் ஷூட்டிங் நடத்த அனுமதியளிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் புதுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடத்தலாம் ஆனால் 10 வயதுக்குக் குறைந்தவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று கண்டிஷன் விதித்தது, இதனால் 65 வயதுக்கு மேற்பட்ட அம்மா, அப்பா, தாத்தா வேடங்களில் யாரும் நடிக்க முடியாத நிலை உருவானது. இந்த வேடங்களில் நடிப்பவர்கள் ஸ்டார் அந்தஸ்து இல்லாத பட்சத்தில் குறைந்த சம்பளமே பெறுகின்றனர் அதைக் கொண்டு தான் அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருந்தவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள்.
உருக்கமான குடும்ப காட்சிகள் எடுக்க முடியாத சூழலால் டைரக்டர்கள் கையை பிசைந்து நின்றனர். அமிதாப்பச்சனுக்கு 78 வயது ஆகிறது அவருக்கும் இந்த விதி பொருந்தியதால் அவர் ஆத்திரம் அடைந்தார். அதை மனதுக்குள்ளேயே வைத்திருந்தார். இதற்கிடையில் மும்பை சினிமா சங்கம் சார்பில் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அரசின் உத்தரவை ரத்து செய்ய ஆர்டர் வாங்கியது. தீர்ப்பு வந்தபின் அமிதாப்பச்சன் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறும்போது,ஷூட்டிங் எப்போது தொடங்கும் வாழ்வாதாரம் எப்போது கிடைக்கும் என்று பலர் ஏங்கி வந்த நிலையில் 65 வயதானவர்கள் நடிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவு என் மனதைப் பெரிதும் பாதித்தது. அப்படியென்றால் அந்த வயது கடந்தவர்கள் வேலை செய்ய லாய் க்கு இல்லாதவர்கள் என்று அரசு நினைக்கிறதா என்பது தெரியவில்லை? எனக்கு 78 வயது ஆகிறது நான் சினிமாவிலிருந்து வெளியேற வேண்டுமா?
இவ்வாறு அமிதாப்பச்சன் தனது கோபத்தை நீண்ட கருத்தாக வெளியிட்டிருக்கிறார்.