பாகுபலி பட இயக்குனர், குடும்பத்தினர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.. பிளாஸ்மா தானத்துக்கு தயாராகிறார்கள்..

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஜூலை 29 அவர்கள் இந்த பாதிப்புக்குள்ளானார்கள் தனக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மருத்துவரின் ஆலோசனையின்படி வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அங்கிருந்தபடியே தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் ராஜமவுலி தெரிவித்தார்.

சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ரசிகர்களுக்கு சில நல்ல சேதி பகிர்ந்துள்ளார். அதில். நான் (ராஜமவுலி) உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை (நெகடிவ்) என தெரிய வந்தது. பிளாஸ்மா நன்கொடை தர நாங்கள் முன்வந்திருக்கிறோம். அதற்கு போதுமான ஆன்டிபாடிகளை உருவாக்க இன்னும் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ராஜமவுலியின் முழு குடும்பமும் கொரோனா வைரஸுக்கு பாதிப்புக்குள்ளான போது நடிகர்கள்​​ மகேஷ் பாபு, ஜெகபதிபாபு, ராகுல் தேவ், நடிகை ராஷி கண்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் அவர்கள் அனைவரும் விரைந்து குணம் ஆகப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்திருந்தனர்.ராஜமவுலி தற்போது ஆர் ஆர் ஆர் என்ற சரித்திர பின்னணியிலான படம் இயக்கி வருகிறார். அதில் ராம் சரன், ஜுனியர் என் டி ஆர், அலியாபட், அஜய் தேவ்கன் நடிக்கின்றனர். கொரோனா தடை காலம் சீரடைந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

More News >>