கட்டப்பா சத்யராஜ்! - தமிழனுக்கு முதன் முறையாக லண்டன் அருங்காட்சியகத்தில் சிலை!

பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா வேடத்தில் சிறப்பாக நடித்திருந்ததை போற்றும் விதமாக லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் சத்யராஜின் உருவத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பிரமாண்டமாக பேசப்பட்ட திரைப்படம் ‘பாகுபலி’. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ராணா டகுபதி, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

பாகுபலி திரைப்படத்தில் சிறப்பாக நடித்து இந்திய முழுவதும் பிரபலமடைந்த முக்கிய கதாப்பாத்திரம் சத்யராஜ் நடித்த ‘கட்டப்பா’ கதாபாத்திரம் தான். இந்நிலையில், கட்டப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததை போற்றும் விதமாக லண்டன் அருங்காட்சியகத்தில் சத்யராஜின் கட்டப்பா தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்ததற்காக பிரபாஸின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட முதல் தமிழன் என்ற பெருமையை சத்யராஜ் பெற்றுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>