தமிழகத்தில் இதுவரை 3.2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..
தமிழகத்தில் இது வரை 3 லட்சத்து 20,355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5397 பேர் பலியாகியுள்ளனர். 53,499 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.13) 5835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 25 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 20,355 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 5144 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 61,459 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 119 பேரையும் சேர்த்தால் 5397 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 58.499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இது வரை தமிழகத்தில் 33 லட்சத்து 75,596 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 65,560 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை. சென்னையில் நேற்று 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 13058 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.செங்கல்பட்டில் நேற்று 453 பேருக்கும், காஞ்சிபுரம் 243, மதுரை 151, திருவள்ளூர் 390, விருதுநகர் 219 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 19,640 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 18,477 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,085 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 12,515 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 10,849 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் இந்த மாவட்டங்களில்தான் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.