பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று..
நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய், ஆராத்யா, விஷால், இயக்குனர் ராஜமவுலி, நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் போன்றவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார்கள். தற்போது தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.பிரபு தேவாவுடன் சார்லி சாப்ளின் மற்றும் டார்லிங்,யாகாவாராயினும் நா காக்க, கடவுள் இருக்கான் குமாரு போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:கடந்த வாரம் எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. தொண்டை கரகரப்பு ஏற்பட்டது. வாசனை உணரும் திறன் மங்கியது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.என் வயதைக் கணக்கில் கொண்டு நான் தைரியமாக இருந்தேன். ஆனால் பெற்றோர், வயதானவர்கள் பாதுகாப்பு முக்கியம். கொரோனா லாக் டவுனில் நான் வீட்டிலேயே முடங்கி இருந்தது ஒருவித இறுக்கத்தைத் தந்தது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலை அதுபோல் உள்ளது.
கொரோனா தொற்று வராமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். மன இறுக்கத்தைப் போக்க குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஒருவாரம் ஆகிவிட்டது, தற்போது குணம் அடைந்து வருகிறேன். மருத்துவம் அளித்து என்னை பார்த்து கொண்ட சுகாதார துறையினருக்கு நன்றி. முக்கியமாக சென்னை மாநகராட்சியின் சுகாதாரா பணியாளர்களின் தொடர்ச்சியான ஆதாரவுக்கும் நன்றி.
இவ்வாறு நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.