மாஜி காதலி இருந்த வீட்டுக்கு ரூ 4.5 கோடி தவணை கட்டிய நடிகர்..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் கடந்த ஜூன் மாதம் இறந்தார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா? என்பது பற்றி சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ .15 கோடி மோசடி தொடர்பான அமலாக்க இயக்குனரகம் (இ.டி) விசாரித்து வருகிறது. சுஷாந்த் காதலி ரியாவுக்கு பணமோசடியில் தொடர்பு இருப்பதாக சுஷாந்த் தந்தை அளித்த புகாரின் பேரில் தற்போது ரியாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கிடுக்கு பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த நடிகர் மும்பை மலாட் நகரில் அமைந்துள்ள ரூ 4.5 கோடி மதிப்புள்ள ஒரு பிளாட்டுக்கு தவணை செலுத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. தவணை செலுத்தப்பட்ட பிளாட்டில் நடிகை அங்கிதா லோகண்டே வசிப்பதாகக் கூறப்படுகிறது என்று அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.
அங்கிதா லோகண்டே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மாஜி காதலி. சுமார் 6 ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் பிரேக் அப் செய்துக் கொண்டனர். ஏற்கனவே அமலாக்க அதிகாரிகள் விசாரணையின் போது, ரியா சக்ரவர்த்தியும், அந்த பிளாட் குறித்து விவரங்கள் அளித்திருக்கிறார். அதற்கான தவணைத் தொகையை செலுத்தியிருந்தாலும், அந்த சொத்தை காலி செய்யுமாறு சுஷாந்த் கேட்க ,முடியாது என்று கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாட் வாங்கியபோது எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் கடந்த சில தவணைகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. இது வங்கிக் கணக்கிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது, அந்த கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஈ.எம்.ஐ.க்கள் கழிக்கப்படுகின்றன.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து அங்கிதா லோகண்டே அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார், மேலும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, சுஷாந்த் ஒரு போதும் பண எண்ணம் கொண்டவரல்ல. அவர் எப்போது வேண்டுமானாலும் தனது சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பி இருக்க முடியும். ஆனால் சுஷாந்த் மன அழுத்தத்திலிருந்த போது ஜூன் 8 ம் தேதி சுஷாந்தை ரியா தனியாக விட்டுச் சென்றது ஏன்? ரியா எனது கவலை அல்ல. எனது கவலை சுஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினராகத்தான் இருந்தனர் என்றார் அங்கிதா.இந்த வழக்கில் ரியா சக்ரவர்த்திக்கு எதிராக உள்ள விஷயங்கள் குறித்து அமலாக்க அதிகாரிகள் ஒவ்வொரு சாத்தியமான முதலீடு மற்றும் பரிவர்த்தனைகளையும் சரிபார்க்கின்றனர். நடிகையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுஷாந்தின் இரண்டு ஊழியர்கள் ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.