விடைபெற்றார் எம்.எஸ். தோனி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். கடந்த உலகக் கோப்பை தொடரில் சரியாகச் செயல்படாததால் அணியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால் ஓய்வு முடிவை அறிவிக்காமலும், அணியில் இடம் பெறுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் பிசிசிஐக்கு கூடுதல் அழுத்தம் என வந்தது. அதே நேரம் இளம் வீரர்களும், மூத்த வீரர்களும் தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வந்தார் தோனி.ஆனால் ஐபிஎல் போட்டிகளில் வருவதற்காக 2 மாதங்கள் முன்பு சென்னை வந்தார். அப்போதே தோனி மீண்டும் களத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் தோனி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கேரியரில் முக்கியமான போட்டிகளின் வீடியோக்களை பகிர்ந்து "உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக தோனி தற்போது சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.