உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாலக் கீரை சப்பாத்தி..nbsp

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாலக் கீரை சப்பாத்தி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா.. 

தேவையான பொருட்கள் :

பாலக் கீரை - அரை கட்டுபச்சை மிளகாய் - இரண்டு இஞ்சி விழுது - கால் டீஸ்பூன்கோதுமை மாவு - கால் கிலோஉப்பு - தேவைக்கேற்பஎண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பாலக் கீரை சேர்த்து மூன்று நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரை வடித்து கீரையுடன் பச்சை மிளகாய், சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, இஞ்சி விழுது, அரைத்த விழுது மற்றும் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின் பிசைந்த மாவினை வட்ட வடிவில் தேய்த்து தோசை தவாவில் எண்ணெய் தடவி அதன் மேல் போட்டு சுட்டு எடுக்கவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் :சட்னி, குருமா, தக்காளி பஜ்ஜியுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com

More News >>