ஹீரோவாகும் இயக்குனர்.. வாழ்த்து சொன்ன நடிகர் தம்பி..

சினிமா ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பார்முலாவை உடைத்தவர் தனுஷ். பக்கத்து வீட்டு சாதாரண பையனும் திறமை இருந்தால் ஹீரோ ஆகலாம் என்று நிரூபித்தார். அதேபோல், அவரது அண்ணன் செல்வராகவன் இயக்குனராக தனது திறமையை நிரூபித்தார். காதல் கொண்டேன், ரெயின்போ காலனி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி அளித்த செல்வராகவன் கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார். அடுத்து புதுப்பேட்டைப் படத்தின் 2ம்பாகம் இயக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் அவரும் ஹீரோவாக நடிப்பில் களம் இறங்குகிறார்.

சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்குத் தம்பியும் நடிகருமான தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், இந்த உலகம் உன்னுடைய நடிப்பு திறமையை நான் பார்த்தது போலவே பார்க்கப்போகிறது. சாணிக் காயிதம் படத்துக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்திருக்கிறார்.செல்வராகவன் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி, ரவீனா நடித்துள்ள ராக்கி படம் முடிவடைந்துள்ளது.

More News >>