கொரோனாவால் கவலைக்கிடமான எஸ்பிபி, மயக்க நிலையிலிருந்து மீண்டார்..
40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் தமிழ். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி உள்ள திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமாகி மயக்க நிலைக்குச் சென்றார். அவர் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். அப்போது வீடியோவில் பேசிய அவர், எனக்கு லேசான காய்ச்சல் தொண்டை கரகரப்பு இருந்தது. பரிசோதனையில் கொரோனா தொற்று என்று தெரிந்தது. எனது உடல் நிலை சீராக உள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம். சிகிச்சை முடிந்து சீக்கிரம் வருவேன். யாரும் என்னை போனில் தொல்லை செய்ய வேண்டாம் என்று கூறினார்.
அதற்கு இரண்டு நாள் கழித்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். எஸ்,பி.பி குணம் அடைந்து வர வேண்டும் என்று பாரதிராஜா முதல் இளையராஜா வரை பிரார்த்தனை செய்வதாக மெசேஜ் மற்றும் வீடியோ பகிர்ந்தனர். இதையடுத்து எஸ்பிபி மகன் சரண் கூறும்போது. எஸ்.பி.பி உடல்நிலை அச்சப்படும் அளவுக்கு மோசம் இல்லை. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றார்.எஸ்.பி.பி உடல்நிலை குறித்து இன்று மருத்துவர்கள் கூறும்போது,எஸ்பிபி மயக்க நிலையிலிருந்து மீண்டிருக்கிறார்.என்றனர். இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் அவர் முழுமையாக உடல் நலம் பெற்று விரைவில் திரும்பி வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.