வில்லாக வளைந்த ஐஸ்வர்யா தனுஷ்.. யோகாசனத்தில் அசத்தும் சூப்பர் ஸ்டார் மகள்
நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பன்முகத் தன்மை கொண்டவராகத் தனது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தையும் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார். பள்ளிப் பருவத்திலேயே பரத நாட்டியத்தில் தேறினார். தற்போது யோகா வல்லுநராகி இருக்கிறார். படங்களில் தனது நடிப்பு, ஸ்டைல் மூலம் சூப்பர் ஸ்டார் அசத்துகிறார். அவரது மூத்த மகள் யோகாசனத்தில் கடினமான பயிற்சியை துல்லியமாகச் செய்து அசத்துகிறார். ஹலாசனா பயிற்சிகள் செய்து அந்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
ஹலாசனா பயிற்சிகள் செய்வது பற்றிய செய்முறை விளக்கத்தையும் அவர் தந்திருக்கிறார்.அதில்,ஹாலசனா செய்யும்போது மெதுவாகச் சுவாசிக்கவும்.யோகா போஸிலிருந்து வெளியே வர, மெதுவாக உங்கள் கைகளை உங்கள் முதுகிலிருந்து விடுவித்து, உங்கள் கால்களைத் தரையில் தட்டவும்.உங்கள் மூளைக்கு அமைதியான அதிர்வுகளை அனுப்புவதற்கும் நச்சுகளை வெளியேற்றுவதற்கும் ஹலசனா அறியப்படுகிறது. உங்களை முதலில் மதியுங்கள் பிறகு அதனை போற்றுங்கள்.பருவகால உணவைச் சாப்பிடுங்கள். குளிர் காலத்தில் மாம்பழங்கள் வளராததற்கு ஒரு காரணம் இருக்கிறது, கோடைக்காலத்தில் ஸ்ட்ராபெர்ரி வளராது. பருவத்தின் பழத்தை அனுபவித்து அதன் அனைத்து இயற்கை நன்மைகளையும் பெறுங்கள் இவ்வாறு யோகா பற்றி விளக்கிய ஐஸ்வர்யா சத்துள்ள உணவின் முக்கியம் பற்றியும் தெரிவித்துள்ளார்.