ஓய்வை அறிவித்த கிரிக்கெட் தல தோனி அமிதாப் பாடல் வெளியிட்டு உருக்கம்.. மனதை உலுக்கி ரசிகர்களைக் கண்ணீரில் மூழ்கடித்த தருணத்தால் பரபரப்பு..

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தாலும் என்றென்றும் ரசிகர்களுக்கு தோனி தான் கேப்டன். சினிமாவில் தல அஜீத் என்றால் கிரிக்கெட் உலகில் தல எம்.எஸ்.தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் டிவி வீடியோ மூலம் அறிவித்துள்ளார். கிரிக்கெட் களத்தில் தோனி சிங்கம் போன்ற நீண்ட (பிடறி) முடியுடன் நுழைந்து அசத்திய தொடக்கக் கால ஆட்டம் முதல் அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரசிகர்களின் மனங்களுக்குள் எப்படியெல்லாம் ஊடுருவினார் என்ற பிரசித்திபெற்ற தனது படங்களையும் அணியின் கொண்டாட்டதியும் பகிர்ந்திருக்கிறார்.

இந்து வெறும் படங்களாக மட்டும் இருந்திருந்தால் வெறும் பேச்சோடு போயிருக்கும் அதையும் மீறி கண்ணுக்குள் ஊடுருவி இதயத்தை கனமாக்கி கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்யும் அளவுக்கு மெயின் பால் தோ பால் கா ஷேர் ஹூன் என்ற நெகிழ்ச்சியான பாடல் ஒன்றை இழையோட விட்டிருக்கிறார். அந்த பாடலுக்குப் பின்னணியில் தோனியின் காட்சிகள் நகரும்போது இந்த தருணங்களை இனி காண்பது எப்போது என்று மனம் உருகி நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. ரசிகர்கள் அந்த டிவி வீடியோவைப் பார்த்த தருணத்திலிருந்து, இது எந்தப் படத்தில் இடம் பெறும் பாடல், அதில் யார் நடித்தது என்று கூகுளில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அப்பாடல் இந்தி பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'கபி கபி' படத்திலிருந்து பாடகர் முகேஷ் பாடியுள்ள மெயின் பால் தோ பால் கா ஷேர் ஹூன் என்ற அருமையான பாடல் தான். சாஹிர் லூதியானிவியின் இப்பாடல் வரிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு பயணத்திற்கும் பொருந்தும்.1976 ஆம் ஆண்டில் வெளியான 'கபி கபி' பாலிவுட்டில் ஒரு சிறந்த கிளாசிக் மற்றும் பலருக்குப் பிடித்த யஷ் சோப்ரா படமாகும். இப்பாடலுக்கு கயாம் இசை அமைத்திருந்தார்.

View this post on Instagram

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on Aug 15, 2020 at 7:01am PDT

More News >>