தொரகா ரண்டி அன்னய்யா.. கமல் யாரை அழைக்கிறார் தெரியுமா?
கமல்ஹாசன் திரைப்படங்களில் அவருக்கு அதிகபட்சமாகப் பாடல்கள் பாடியவர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தான். எஸ்.பி.பி பாடினால் அந்த பாடல் தான் சொந்தமாகப் பாடுவது போலவே இருக்கும் என்று தன்னிடம் பலரும் சொல்வார்கள் என்று கமலே எஸ்பிபி பற்றி ஒருமுறை மேடையில் குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் இருவருக்குமான பந்தம் ஒரு மொழி நட்பல்ல, தமிழ், தெலுங்கு இந்தியிலும் தொடர்ந்தது.
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல ஆயிரம் ஆயிரம் இருக்கிறது இவர்களுக்குள். இவ்வளவு நெருக்கமான கமல், எஸ்பிபிக்கு இப்படியொரு நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது தெரிந்தும், அவர் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று பலரும் நினைத்திருப்பார்கள். அவர் வதந்திகளை எளிதாக நம்பமாட்டார்.அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வந்தாராம்.இன்று வெளிப்படையாகத் தனது கருத்தை இணைய தளத்தில் பதிவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். அதில், அன்பிற்கினிய அன்னய்யா உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரலின்னும் ஒலித்திட வேண்டும்.மீண்டும் வாருங்கள் தொரகா ரண்டி அன்னய்யா என தெரிவித்திருக்கிறார்.